Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 952

பொருட்பால்ஒழிபியல்96. குடிமை

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்இழுக்கார் குடிப்பிறந் தார்.

ozhukkamum vAymaiyum nANumim mUnRumizhukkAr kuTippiRan tAr

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

உயர்ந்த நற்பண்புகள் கொண்ட குடியில் பிறந்தவர்கள், நன்னடத்தை தரும் ஒழுக்கம், உண்மையே பேசும் வாய்மை, இழிவான செயல்களுக்கு வெட்கி ஒதுங்கும் நாணம் ஆகிய இந்த மூன்றிலிருந்தும் ஒருபோதும் தவற மாட்டார்கள்.

• குடிப்பிறந்தார் = நற்பண்புகள் மிக்க சிறந்த குடியில் பிறந்தவர்கள்,• ஒழுக்கமும் = தமக்குரிய நல்வழியான ஒழுக்கமும்,• வாய்மையும் = உண்மை பேசும் வாய்மையும்,• நாணும் = இழிவான செயல்களுக்கு வெட்கும் நாணமும் ஆகிய,• இம்மூன்றும் = இந்த மூன்று நற்பண்புகளிலிருந்தும்,• இழுக்கார் = ஒருபோதும் வழுவி விலக மாட்டார்கள்.

மு.வரதராசன்

உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

பரிமேலழகர்

குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.)

சாலமன் பாப்பையா

நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

Meaning in English

In these three things the men of noble birth fail not: In virtuous deed and truthful word, and chastened thought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout