Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 951

பொருட்பால்ஒழிபியல்96. குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்செப்பமும் நாணும் ஒருங்கு.

iRpiRantAr kaNNalla tillai iyalpAkasseppamum nANum orungku

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனம், சொல், செயல்களில் நேர்மையும் நடுவுநிலைமையும் தவறாத தன்மையும், பழிபாவங்களுக்கு நாணும் அடக்கமும் நற்குடியில் பிறந்தவரிடம் இயல்பாக அமைவது போல மற்றவரிடம் ஒருசேர அமைவதில்லை.

• இற்பிறந்தார்கண் அல்லது = சிறந்த நற்குடியில் பிறந்தவரிடமே அன்றி மற்றவரிடம்,• செப்பமும் = நடுவுநிலைமையும் (செம்மையும்),• நாணும் = பழிபாவங்களுக்கு அஞ்சும் நாணமும்,• ஒருங்கு = ஒருசேர,• இயல்பாக இல்லை = இயற்கையான நற்குணமாக அமைவதில்லை.

மு.வரதராசன்

நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

பரிமேலழகர்

செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. (இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல, செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.)

சாலமன் பாப்பையா

சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.

Meaning in English

Save in the scions of a noble house, you never find Instinctive sense of right and virtuous shame combined

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout