பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்குஅணியல்ல மற்றுப் பிற.
paNivuTaiyan insolan Atal oruvaRkuaNiyalla maRRup piRa
Sathyapriya Krishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
பணிவுடனே இன்சொல் பேசும் தன்மையே!அதுவே மனிதற்கு அணிகலனே!உடலில் அணியும் மற்ற நகைகளே!மெய்யான அணிகள் ஆகவே மாட்டாதே!
• ஒருவற்கு = ஒரு மனிதனுக்கு• பணிவுடையன் = அடக்கமான பணிவு உள்ளவனாகவும்,• இன்சொலன் ஆதல் = கனிவான இனிய சொற்களைப் பேசுபவனாகவும் விளங்குவதே• அணி = உண்மையான சிறந்த அணிகலனாகும்;• மற்றுப் பிற = உடம்பில் அணியும் பிற ஆபரணங்கள்• அல்ல = உண்மையான அணிகள் ஆகாது.
மு.வரதராசன்
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
பரிமேலழகர்
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
Meaning in English
Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth





