Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 94

அறத்துப்பால்இல்லறவியல்10. இனியவைகூறல்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

tunpuRUum tuvvAmai illAkum yArmATTuminpuRUum inso lavarkku

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

யார்மாட்டும் இன்புறுமே சொல் பேசுவோர்க்கே!இனிமையாய்ப் பேசிடும் அந்த நல்லோர்க்கே!துன்பம் மிகுக்கும் வறுமை என்பதுவே!அவர்தம் வாழ்வில் ஒருபோதும் வாராதே!

• யார்மாட்டும் = எவரிடத்திலும்• இன்புறூஉம் = இன்பத்தை உண்டாக்கும்• இன்சொலவர்க்கு = இனிய சொற்களைப் பேசுபவர்களுக்கு,• துன்புறூஉம் = துன்பத்தை மிகுதிப்படுத்தும்• துவ்வாமை = வறுமையானது (ஆதரவற்ற நிலை)• இல்லாகும் = ஒருபோதும் உண்டாகாது.

மு.வரதராசன்

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

பரிமேலழகர்

யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

Meaning in English

The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout