முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்இன்சொ லினதே அறம்.
mukattAn amarntintu nOkki akattAnAminso linatE aRam
Parthiban
பொருள் / உரை
முருகா எளிய உரை
கண்டவுடனே முகம் மலர்ந்திடுமே!கனிவுடன் பார்வையும் அமைந்திடுமே!மனதின் ஆழத்திலே பிறக்கும் சொல்லே!இன்சொல் பேசலே தலையாய அறமே!
• முகத்தான் அமர்ந்து = கண்டவுடன் முகம் மலர்ந்து• இனிது நோக்கி = கனிவான பார்வையோடு பார்த்து,• அகத்தான் ஆம் = உள்ளத்தின் ஆழத்திலிருந்து பிறக்கும்• இன்சொலினதே = இனிய சொற்களைப் பேசுவதே• அறம் = தலையாய நல் அறமாகும்.
மு.வரதராசன்
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
பரிமேலழகர்
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.
Meaning in English
With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity





