பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.
pazhakiya selvamum paNpum keTukkumkazhakattuk kAlai pukin
Kurale Kavithaiyai
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனுடைய வாழ்நாளின் காலம் சூதாடும் கூடத்திலேயே கழியுமானால், அது அவனது தலைமுறை தலைமுறையாய் வந்த பழம்பெரும் செல்வத்தையும் அவனது நற்பண்புகளையும் அடியோடு அழித்துவிடும்.
• கழகத்துக் காலை புகின் = சூதாட்டக் கூடத்தில் காலம் கழிந்தால்,• பழகிய செல்வமும் = பரம்பரைச் செல்வத்தையும்,• பண்பும் கெடுக்கும் = நற்குணங்களையும் அழித்துவிடும்.
மு.வரதராசன்
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.
பரிமேலழகர்
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண் கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் - அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும். ('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான் செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும் முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.
Meaning in English
Ancestral wealth and noble fame to ruin haste, If men in gambler's halls their precious moments waste





