Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 936

பொருட்பால்அங்கவியல்94. சூது

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.

akaTArAr allal uzhapparsU tennummukaTiyAn mUTappaT TAr

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

சூதாட்டம் என்னும் மூதேவியால் சூழப்பட்டு வசப்படுத்தப்பட்டவர்கள், வயிறார உண்ண உணவும் கிடைக்காமல் பட்டினியால் வாடி, வாழ்நாள் முழுவதும் தாங்க முடியாத பெரும் துன்பங்களில் உழன்று தவிப்பார்கள்.

• சூதென்னும் முகடியான் மூடப்பட்டார் = சூதாட்டம் எனும் மூதேவியால் வசப்பட்டவர்,• அகடாரார் = வயிறார உணவின்றி வாடுவர்,• அல்லல் உழப்பர் = எப்போதும் பெருந்துன்பத்தில் தவிப்பர்.

மு.வரதராசன்

சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

பரிமேலழகர்

சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.)

சாலமன் பாப்பையா

சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.

Meaning in English

Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil, They suffer grievous want, and sorrows sore bewail

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout