Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 934

பொருட்பால்அங்கவியல்94. சூது

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல்.

siRumai palaseytu sIrazhikkum sUtinvaRumai taruvaton Ril

D. Vanitha

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவனுக்குப் பல இழிவுகளையும் துன்பங்களையும் உண்டாக்கி, அவனது நற்புகழையும் பெருமையையும் அழிக்கும் சூதாட்டத்தைப் போல, கொடிய வறுமையைக் கொண்டுவந்து சேர்க்கும் கேடு வேறொன்றும் இல்லை.

• சிறுமை பலசெய்து = பல துன்பங்களையும் இழிவுகளையும் உண்டாக்கி,• சீரழிக்கும் = நற்புகழை அழிக்கும்,• சூதின் = சூதாட்டத்தைப் போல,• வறுமை தருவது ஒன்றில் = வறுமை தரும் தீமை வேறில்லை.

மு.வரதராசன்

ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

பரிமேலழகர்

சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும் சூதுபோல்; வறுமை தருவது ஒன்று இல் - நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று இல்லை.(அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும் நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும் தீயினத்தையும்கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார். வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

துன்பங்கள் பல தந்த,நம் புகழையும் அழிக்கும் சூதைப் போல் நமக்கு வறுமை தருவது வேறு ஒன்றும் இல்லை.

Meaning in English

Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely down

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout