Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 932

பொருட்பால்அங்கவியல்94. சூது

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

onReyti nURizhakkum sUtarkkum uNTAngkolnanReyti vAzhvatOr ARu

B. Mahathi

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருமுறை சிறிதளவு வென்றுவிட்டு, மேலும் வெல்லலாம் என்ற பேராசையால் நூறு மடங்கு செல்வத்தை இழந்து அழியும் சூதாடிகளுக்கு, நன்மையடைந்து சிறப்பாக வாழும் வழி ஒன்று உண்டாக முடியுமோ? ஒருபோதும் முடியாது.

• ஒன்றெய்தி = ஒருமுறை சிறிதளவு பெற்று,• நூறிழக்கும் சூதர்க்கும் = நூறு மடங்கு இழக்கும் சூதாடிகளுக்கு,• நன்றெய்தி வாழ்வது = நன்மைகளை அடைந்து வாழ்வதற்கு,• ஓர ஆறு உண்டாங்கொல் = ஒரு வழி உண்டாக முடியுமோ? (முடியாது).

மு.வரதராசன்

ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ.

பரிமேலழகர்

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற் பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும் பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு உண்டாங்கொல் - பொருளால் அறனும் இன்பமும் எய்தி வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது. (அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால் எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஒன்றைப் பெற்று, நூற்றினை இழந்துபோகும் சூதாடுபவர்க்கும் நல்லதைப் பெற்று வாழம் ஒரு வழி உண்டாகுமோ?

Meaning in English

Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way That they may good obtain, and see a prosperous day

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout