Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 931

பொருட்பால்அங்கவியல்94. சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

vENTaRka venRiTinum sUtinai venRatUumtUNTiRpon mInvizhungki aRRu

Rakesh Maringanti

பொருள் / உரை

முருகா எளிய உரை

தான் வெற்றி பெறுவதாயினும் சூதாட்டத்தை ஒருபோதும் விரும்பக் கூடாது; சூதில் பெறும் தொடக்க வெற்றியானது, தூண்டில் முள்ளை இரை என்று மயங்கி விழுங்கி உயிரை விடும் மீனின் நிலையைப் போன்ற பெரும் அழிவைத் தரும்.

• வென்றிடினும் = வெற்றி பெறுவதாயினும்,• சூதினை வேண்டற்க = சூதாட்டத்தை விரும்பக் கூடாது;• வென்றதூஉம் = சூதில் அடையும் வெற்றியும்,• தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று = தூண்டில் முள்ளை இரை என விழுங்கும் மீன் போன்ற அழிவாகும்.

மு.வரதராசன்

வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.

பரிமேலழகர்

வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும்.(வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.)

சாலமன் பாப்பையா

வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.

Meaning in English

Seek not the gamester's play; though you should win, Your gain is as the baited hook the fish takes in

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout