Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 929

பொருட்பால்அங்கவியல்93. கள்ளுண்ணாமை

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

kaLittAnaik kAraNam kATTutal kIzhnIrkkuLittAnait tItturIi aRRu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

மது மயக்கத்தில் இருப்பவனிடம் நியாயங்களையும் தத்துவங்களையும் கூறித் திருத்த முயல்வது, தண்ணீருக்குள் ஆழமாக மூழ்கியவனைத் தண்ணீருக்குள் எரியாத தீப்பந்தத்தைக் கொண்டு தேடுவது போன்ற பயனற்ற செயலாகும்.

• களித்தானைக் காரணங்காட்டுதல் = போதை மயக்கத்தில் உள்ளவனிடம் நியாயம் பேசுவது,• கீழ்நீர்க் குளித்தானை = தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பவனை,• தீத்துரீஇ அற்று = எரியும் தீப்பந்தத்தால் தேடுவதற்கு ஒப்பாகும்.

மு.வரதராசன்

கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.

பரிமேலழகர்

களித்தானைக் காரணம் காட்டுதல் - கள்ளுண்டு களித்தான் ஒருவனை இஃது ஆகாதென்று பிறனொருவன் காரணம் காட்டித் தெளிவித்தல்; நீர்க்கீழ்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று - நீருள் மூழ்கினான் ஒருவனைப் பிறனொருவன் விளக்கினால் நாடுதலை யொக்கும். ('களித்தானை' என்னும் இரண்டாவது, 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானோ' (கலித்.மருதம் -7) என்புழிப்போல நின்றது. நீருள் விளக்குச் செல்லாதாற்போல அவன் மனத்துக் காரணம் செல்லாது என்பதாம். இதனான் அவனைத் தெளிவித்தல் முடியாது என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.

Meaning in English

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave Is he who strives to sober drunken man with reasonings grave

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout