Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 928

பொருட்பால்அங்கவியல்93. கள்ளுண்ணாமை

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்துஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

kaLittaRiyEn enpatu kaiviTuka nenjsattoLittatUum AngkE mikum

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

'நான் ஒருபோதும் குடித்து மயங்கியதில்லை' என்று சாதிப்பதை விட்டுவிட வேண்டும்; ஏனெனில், மனதிற்குள் மறைத்து வைத்திருந்த அந்தரங்க ரகசியங்களும் குற்றங்களும் மது அருந்திய உடனேயே கட்டுப்பாட்டை இழந்து வெளிப்பட்டுவிடும்.

• களித்தறியேன் என்பது கைவிடுக = குடித்து மயங்கியதே இல்லை என்ற பொய்யை விடுக,• நெஞ்சத்து ஒளித்ததூஉம் = நெஞ்சில் ஒளித்து வைத்த ரகசியங்களும்,• ஆங்கே மிகும் = குடித்த உடனே வெளிப்பட்டுவிடும்.

மு.வரதராசன்

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

பரிமேலழகர்

களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.

Meaning in English

No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout