Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 923

பொருட்பால்அங்கவியல்93. கள்ளுண்ணாமை

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களி.

InRAL mukattEyum innAtAl enmaRRussAnROr mukattuk kaLi

Kurale Kavithaiyai

பொருள் / உரை

முருகா எளிய உரை

எல்லாக் குற்றங்களையும் மன்னிக்கும் தாயின் முன்பாகவே ஒருவன் குடித்து மயங்கிக் கிடப்பது அவளுக்குத் தாங்க முடியாத துயரத்தைத் தரும் என்றால், ஒழுக்கக் கேட்டைப் பொறுக்காத சான்றோர்களின் முன்னிலையில் அது எத்தகைய பெரும் இழிவைத் தரும்!

• ஈன்றாள் முகத்தேயும் = பெற்ற தாயின் முன்னிலையிலேயே,• களி இன்னாதால் = கள்ளருந்தி மயங்குவது துன்பம் தருவதாகும்;• சான்றோர் முகத்து = ஒழுக்கமுடைய சான்றோர் முன்னிலையில்,• என் மற்று = அது எத்தகைய அருவருப்பைத் தரும்!

மு.வரதராசன்

பெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.

பரிமேலழகர்

ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது - யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றுச் சான்றோர் முகத்து என்? - ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்?(மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண்அழியும், அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று, ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ?என்பதாம்.)

சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்?

Meaning in English

The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wise

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout