Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 922

பொருட்பால்அங்கவியல்93. கள்ளுண்ணாமை

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்.

uNNaRka kaLLai uNiluNka sAnROrAneNNap paTavENTA tAr

Vishnupriya Rangarajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறிவை அழிக்கும் மதுவை எவரும் குடிக்கக் கூடாது; அறிவுடைய சான்றோர்களால் மனிதனாக மதிக்கப்படுவதை விரும்பாதவர்கள் வேண்டுமானால் குடிக்கலாம்.

• கள்ளை உண்ணற்க = மதுவைக் குடிக்கக் கூடாது,• உணில் = மீறிக்குடிக்க நினைத்தால்,• சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் = சான்றோர்களால் மதிக்கப்பட விரும்பாதவர்கள்,• உண்க = குடிக்கட்டும்.

மு.வரதராசன்

கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

பரிமேலழகர்

கள்ளை உண்ணற்க - அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க - அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்க. (பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)'

சாலமன் பாப்பையா

போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

Meaning in English

Drink not inebriating draught Let him count well the cost Who drinks, by drinking, all good men's esteem is lost

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout