Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 920

பொருட்பால்அங்கவியல்92. வரைவின்மகளிர்

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு.

irumanap peNTirum kaLLum kavaRumtirunIkkap paTTAr toTarpu

Akhil K Vijayakumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

வஞ்சகமான இருமனம் கொண்ட விலைமகளிர், அறிவை மயக்கும் கள், செல்வத்தை அழிக்கும் சூதாட்டம் ஆகிய இம்மூன்றும், திருமகளால் கைவிடப்பட்டுச் சீரழியும் துரதிர்ஷ்டசாலிகளுக்கே நட்பாக அமையும்.

• இருமனப் பெண்டிரும் = உள்ளொன்று புறமொன்று காட்டும் விலைமகளிரும்,• கள்ளும் = போதை மதுவும்,• கவறும் = சூதாட்டமும்,• திருநீக்கப்பட்டார் தொடர்பு = செல்வம் இழந்தோரின் சேர்க்கையாகும்.

மு.வரதராசன்

இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

பரிமேலழகர்

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு. (இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.

Meaning in English

Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no more

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout