ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்பமாய மகளிர் முயக்கு.
Ayum aRivinar allArk kaNangkenpamAya makaLir muyakku
S. M. Yogeshwaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
வஞ்சனை நிறைந்த போலி அன்பால் மயக்கும் விலைமகளிரின் சேர்க்கையை, அவர்களின் கபடத்தை ஆராய்ந்து அறியும் அறிவில்லாதவர்களுக்கு, காம மயக்கம் காட்டி உயிரையே குடிக்கும் மோகினிப் பேய் என்று சான்றோர்கள் கூறுவார்கள்.
• மாய மகளிர் முயக்கு = வஞ்சக விலைமகளிரின் அணைப்பை,• ஆயும் அறிவினர் அல்லார்க்கு = ஆராய்ந்து அறியும் அறிவற்றவருக்கு,• அணங்கு என்ப = உயிரைக் குடிக்கும் மோகினிப் பேய் என்பர்.
Murugaa simple commentary
The wise will say that to those who lack the wisdom to examine and know their deceit, the union with courtesans who captivate with false love filled with treachery is a Mohini ghost that displays lustful delusion and drinks their very life.
• The embrace of deceitful women = the embrace of deceitful courtesans,• To those who lack discerning wisdom = to those who lack the wisdom to examine and know,• They say it is an evil spirit = they say it is a Mohini ghost that drinks life.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
பரிமேலழகர்
மாய மகளிர் முயக்கு - உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர்.(அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்.தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)
Parimelazhagar
The embrace of deceitful women, the embrace of women skilled in deceiving through form, speech, and deeds; to those who do not have discerning wisdom, they call it a demoness, the learned say that to those who do not have the wisdom to examine and know that deceit, it is the touch of a demoness. (Demoness, a celestial woman who takes life through the path of lust. Touch, contact. Through this metaphor, it is obtained that the embrace seems sweet at first and later takes life. To show that this is the conclusion of the learned, he stated it by attributing it to them. That noun came by way of ellipsis.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
Meaning in English
As demoness who lures to ruin woman's treacherous love To men devoid of wisdom's searching power will prove

