நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்.
niRainenjsam illavar tOyvar piRanenjsiRpENip puNarpavar tOL
Farhan Navas
பொருள் / உரை
முருகா எளிய உரை
மனதில் பணத்தையும் நகைகளையுமே நினைத்துக் கொண்டு உடலால் மட்டும் போலி உறவுகொள்ளும் விலைமகளிரின் தோள்களை, புலனடக்கமும் ஒழுக்க உறுதியும் இல்லாத பலவீனமானவர்களே நாடி மயங்குவார்கள்.
• பிறநெஞ்சிற் பேணி = மனதில் பணத்தை மட்டுமே விரும்பி,• புணர்பவர் தோள் = உடலால் கூடும் விலைமகளிரின் தோளை,• நிறைநெஞ்சம் இல்லவர் = மனக்கட்டுப்பாடு இல்லாதவர்களே,• தோய்வார் = தழுவி மயங்குவர்.
மு.வரதராசன்
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
பரிமேலழகர்
நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். (பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.)
சாலமன் பாப்பையா
பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.
Meaning in English
Who cherish alien thoughts while folding in their feigned embrace, These none approach save those devoid of virtue's grace





