Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 915

பொருட்பால்அங்கவியல்92. வரைவின்மகளிர்

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்.

potunalattAr punnalan tOyAr matinalattinmANTa aRivi navar

Barani Krishnan

பொருள் / உரை

முருகா எளிய உரை

இயற்கையான நுண்ணறிவும் சிறந்த கல்வியறிவும் கொண்ட பெருமைமிக்க சான்றோர்கள், பணம் கொடுப்பவர் எவருக்கும் பொதுவாக உடலை விற்கும் பொதுமகளிரின் இழிவான அற்ப இன்பத்தை ஒருபோதும் தீண்ட மாட்டார்கள்.

• பொதுநலத்தார் = எவருக்கும் பொதுவாக இன்பம் விற்கும் மகளிரின்,• புன்னலம் தோயார் = அற்ப இன்பத்தை நாடமாட்டார்,• மதிநலத்தின் = நுண்ணறிவாலும் கல்வியறிவாலும்,• மாண்ட அறிவினவர் = சிறந்த உயர்ந்த சான்றோர்.

மு.வரதராசன்

இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.

பரிமேலழகர்

மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல்நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.(மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்'என்றும்,அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

Meaning in English

From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee;

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout