பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர்.
poruTporuLAr punnalan tOyAr aruTporuLAyum aRivi navar
Gokul
பொருள் / உரை
முருகா எளிய உரை
பணத்தையே முதன்மையாகக் கொண்ட விலைமகளிரின் இழிவான அற்ப இன்பத்தை, அருளும் கருணையுமே உண்மையான செல்வம் என்று ஆராய்ந்து உணரும் நல்லறிவு கொண்ட சான்றோர்கள் ஒருபோதும் தீண்ட மாட்டார்கள்.
• பொருட்பொருளார் = பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட விலைமகளிரின்,• புன்னலம் தோயார் = அற்ப இன்பத்தைத் தீண்டமாட்டார்,• அருட்பொருள் ஆயும் = அருளொழுக்கத்தை ஆராயும்,• அறிவினவர் = அறிவுடைய சான்றோர்.
மு.வரதராசன்
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.
பரிமேலழகர்
பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள் ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார். (அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
அருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.
Meaning in English
Their worthless charms, whose only weal is wealth of gain, From touch of these the wise, who seek the wealth of grace, abstain





