Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 913

பொருட்பால்அங்கவியல்92. வரைவின்மகளிர்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ அற்று.

poruTpeNTir poymmai muyakkam iruTTaRaiyilEtil piNantazhIi aRRu

Bavatharahan

பொருள் / உரை

முருகா எளிய உரை

பணத்திற்காக மட்டுமே உடலால் பழகும் விலைமகளிரின் பொய்யான தழுவல், கும்மிருட்டான அறையில் எவ்வித உணர்வுமின்றி அந்நியப் பிணத்தைக் கூலிக்காக அணைத்துக் கிடப்பதற்கு ஒப்பாகும்.

• பொருட்பெண்டிர் = பணத்தை விரும்பும் விலைமகளிரின்,• பொய்ம்மை முயக்கம் = பொய்யான அணைப்பு,• இருட்டறையில் = இருட்டு அறையில்,• ஏதில் பிணந்தழீஇ அற்று = முன்பின் அறியாத அந்நியப் பிணத்தைத் தழுவுவது போன்றதாகும்.

மு.வரதராசன்

பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

பரிமேலழகர்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற்போலும். (பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

Meaning in English

As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women's charms

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout