பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல்.
payantUkkip paNpuraikkum paNpin makaLirnayantUkki naLLA viTal
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனிடம் கிடைக்கும் பொருளைக் கணக்கிட்டு, அதற்குத் தகுந்தாற்போல் போலியான நற்பண்புகளைப் பேசும் பண்பற்ற விலைமகளிரின் வஞ்சக நோக்கத்தை உணர்ந்து, அவர்களைச் சேராமல் அறவே விலக்கிவிட வேண்டும்.
• பயன்தூக்கி = ஆதாயத்தைக் கணக்கிட்டு,• பண்புரைக்கும் பண்பின் மகளிர் = நல்லவரைப் போலப் பேசும் பண்பற்ற விலைமகளிரின்,• நயன்தூக்கி = கபடமான நடத்தையை ஆராய்ந்து,• நள்ளாவிடல் = சேராமல் அறவே விலக்குக.
Murugaa simple commentary
One must realize the deceitful intention of characterless courtesans who calculate the wealth obtainable from a person and speak of fake virtues accordingly, and completely shun them without associating with them.
• Weighing the benefit = calculating the gain,• Women devoid of character who speak of virtue = of characterless courtesans who speak like good women,• Weighing their pleasantness = examining their deceitful conduct,• Avoiding association = completely shun without associating.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
கிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.
பரிமேலழகர்
பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக. (பண்பு, சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும் அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பதுதோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.)
Parimelazhagar
Weighing the gain, the women without virtue who speak of virtue, of the women without virtue who measure and know the wealth a man has, and speak of their own possession of virtue until that is obtained; weighing their conduct, avoid associating with them, examining and knowing their way of conduct, leave them without associating with them. (To show that virtue abides only in their words and not in themselves, he said 'women without virtue', and to state that its being their caste duty for them is known not only by treatises but also by their deeds, he said 'weighing their conduct', and to show that such knowledge is the means for leaving them, he afterwards said 'avoid associating with them'.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
ஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.
Meaning in English
Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society depart

