Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 911

பொருட்பால்அங்கவியல்92. வரைவின்மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்.

anpin vizhaiyAr poruLvizhaiyum AytoTiyArinsol izhukkut tarum

Ajit Natarajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாமல் செல்வத்தைப் பறிப்பதற்காக மட்டுமே பழகும் விலைமகளிர் பேசும் மாயையான இனிய பேச்சு, அவர்களை நம்புபவர்களுக்குப் பெருந்துன்பத்தையும் பேரழிவையுமே தரும்.

• அன்பின் விழையார் = உண்மையான அன்பின்றி,• பொருள்விழையும் ஆய்தொடியார் = செல்வத்தை விரும்பும் விலைமகளிரின்,• இன்சொல் = போலியான இனிய சொல்,• இழுக்குத் தரும் = பெருந்துன்பத்தையே தரும்.

மு.வரதராசன்

அன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.

பரிமேலழகர்

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும். (பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.

Meaning in English

Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout