Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 91

அறத்துப்பால்இல்லறவியல்10. இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

insolAl Iram aLaiip paTiRilavAmsemporuL kaNTArvAys sol

G. Sree Gayathri

பொருள் / உரை

முருகா எளிய உரை

மெய்ப்பொருள் கண்ட சான்றோர் வாய்ச்சொல்லதுவே!உண்மையான இன்சொல் என்பது இதுவே!அன்பும் இரக்கமும் நெஞ்சத்தில் கலந்தே!வஞ்சம் இலாமல் வெளிப்பட்டு வருமே!

• இன்சொல் = உண்மையான 'இன்சொல்' என்பது,• செம்பொருள் கண்டார் = அறநெறியின் மெய்ப்பொருளை உணர்ந்த சான்றோர்களின்• வாய்ச் சொல் = வாயிலிருந்து பிறக்கும் சொல்லாகும்;• ஈரம் அளைஇ = அது உள்ளத்தில் அன்பும் இரக்கமும் கலந்து,• படிறு இலவாம் = எந்த வஞ்சனையும் இல்லாமல் வெளிப்படும்.

மு.வரதராசன்

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

பரிமேலழகர்

இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

Meaning in English

Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout