Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 906

பொருட்பால்அங்கவியல்91. பெண்வழிச்சேறல்

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர்.

imaiyArin vAzhinum pATilarE yillALamaiyArtO Lanjsu pavar

Velu

பொருள் / உரை

முருகா எளிய உரை

மனைவியின் மென்மையான தோள்களுக்கு அஞ்சி நடுங்கி அடிபணிந்து வாழ்பவர்கள், தேவர்களைப் போல வானளாவிய செல்வத்தோடும் போகத்தோடும் வாழ்ந்தாலும், அவர்களுக்கு உண்மையான ஆண்மைப் பெருமையும் நன்மதிப்பும் கிடையாது.

• இல்லாள் அமை ஆர்தோள் அஞ்சுபவர் = மனைவியின் மெல்லிய தோளுக்கு அஞ்சி அடிபணிபவர்,• இமையாரின் வாழினும் = தேவர்களைப் போலச் செல்வத்தோடு வாழ்ந்தாலும்,• பாடிலரே = ஆண்மைப் பெருமை இல்லாதவரே ஆவர்.

மு.வரதராசன்

மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

பரிமேலழகர்

இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம் இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்; இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து வாழ்ந்தாராயினும், ஆண்மையிலர். (அமரர்போல் வாழ்தலாவது, பகைத்த வீரர் தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு வாழ்தல். அது கூடாமையின் 'வாழினும்' என்றார். 'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார் ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார் ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் அவளை அஞ்சுதற் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தேவர்களைப் போல வாழ்ந்தாலும் மனைவியின் மூங்கில் போன்ற தோளுக்குப் பயப்படுபவர், ஆண்மையால் வரும் பெருமை இல்லாதவரே.

Meaning in English

Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife's slender arm

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout