Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 905

பொருட்பால்அங்கவியல்91. பெண்வழிச்சேறல்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்.

illALai yanjsuvA nanjsumaR RenjnjAnRumnallArkku nalla seyal

Subash Veeramani

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன் மனைவிக்கு அஞ்சி நடுங்கி வாழ்பவன், பெற்றோர், விருந்தினர், சான்றோர்கள் போன்ற நல்லவர்களுக்குத் தன் செல்வத்தால் நன்மை செய்வதற்கும் எப்போதும் பயந்து தயங்கித் தவிர்ப்பான்.

• இல்லாளை அஞ்சுவான் = மனைவிக்கு அஞ்சி வாழ்பவன்,• நல்லார்க்கு நல்ல செயல் = பெற்றோர், பெரியோர் போன்ற நல்லோருக்கு நன்மை செய்ய,• எஞ்ஞான்றும் மற்று அஞ்சும் = எப்போதும் பயந்து தயங்குவான்.

மு.வரதராசன்

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

பரிமேலழகர்

இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும் - தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும். (நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்யவேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார்.'இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக'(சீவக.மண்மகள்.217) என்றார் பிறரும்.)

சாலமன் பாப்பையா

தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.

Meaning in English

Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout