Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 904

பொருட்பால்அங்கவியல்91. பெண்வழிச்சேறல்

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று.

manaiyALai yanjsum maRumaiyi lALanvinaiyANmai vIReyta linRu

Venkat

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறநெறி தவறித் தன் மனைவிக்கு அஞ்சி நடுங்கும் அறப்பயனற்ற மனிதனுக்கு, அவனிடம் எத்தகைய செயல் திறமை இருந்தாலும் அது சான்றோர்களால் பாராட்டப்பட்டுப் பெருமை அடையாது.

• மனையாளை அஞ்சும் = மனைவிக்கு அஞ்சி நடுங்கும்,• மறுமையிலாளன் = நற்பயன் இல்லாதவனின்,• வினையாண்மை = செயல் திறமை,• வீறெய்தல் இன்று = பெருமை பெற்று விளங்காது.

மு.வரதராசன்

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

பரிமேலழகர்

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)

சாலமன் பாப்பையா

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.

Meaning in English

No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout