Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 903

பொருட்பால்அங்கவியல்91. பெண்வழிச்சேறல்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.

illALkaN tAzhnta iyalpinmai enjnjAnRumnallAruL nANut tarum

Rajesh Muthupandian

பொருள் / உரை

முருகா எளிய உரை

அறநெறி தவறி மனைவியிடம் அச்சப்பட்டுத் தாழ்ந்து நடக்கும் ஒழுங்கற்ற பலவீனம், ஆண்மையும் ஒழுக்கமும் மிக்க சான்றோர்கள் கூடியிருக்கும் அவையில் அவனுக்கு எக்காலத்திலும் தலைகுனிவையும் வெட்கத்தையுமே தரும்.

• இல்லாள்கண் தாழ்ந்த = மனைவியிடம் பயந்து தாழ்ந்து நடக்கும்,• இயல்பின்மை = இயல்புக்கு மாறான பலவீனம்,• நல்லாருள் = சான்றோர் கூடும் அவையில்,• எஞ்ஞான்றும் நாணுத் தரும் = எப்போதுமே வெட்கத்தைத் தரும்.

மு.வரதராசன்

மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும் போது நாணத்தைச் தரும்.

பரிமேலழகர்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும். (அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சியொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம், ஆகவே, எல்லாக்குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத்தரும்' என்றார்.)

சாலமன் பாப்பையா

மனைவியிடம் பணிந்து போகும் பயம் ஒருவனிடம் இருந்தால், இது இல்லாத நல்லவர் முன்னே அவனுக்கு எப்போதும் வெட்கத்தைக் கொடுக்கும்.

Meaning in English

Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout