Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 900

பொருட்பால்அங்கவியல்90. பெரியாரைப் பிழையாமை

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்.

iRantamainta sArpuTaiyar Ayinum uyyArsiRantamainta sIrAr seRin

Ruthresh Kumar

பொருள் / உரை

முருகா எளிய உரை

மிகவும் சிறந்த தவமும் ஒழுக்கமும் கொண்ட சான்றோர்கள் சினங்கொள்ளும் நிலையை ஏற்படுத்தினால், அளவுகடந்த பெரும் படைகளும் கோட்டை அரண்களும் துணையாக உடையவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.

• சிறந்தமைந்த சீரார் செறின் = சிறந்த ஒழுக்கமும் பெருமையும் மிக்கோர் சினந்தால்,• இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் = எத்துணை பெரும் துணைப்பலம் உடையவராயினும்,• உய்யார் = தப்பிப் பிழைக்க முடியாது.

மு.வரதராசன்

மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

பரிமேலழகர்

சிறந்து அமைந்த சீரார் செறின் - கழிய மிக்க தவத்தினை உடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார் - அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையார் ஆயினும் அதுபற்றி உய்யமாட்டார். (சார்பு - அரண், படை, பொருள், நட்பு என இவை. அவை எல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது சீர் எனப்பட்டது. இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும் உய்யார் என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.

Meaning in English

Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout