Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 899

பொருட்பால்அங்கவியல்90. பெரியாரைப் பிழையாமை

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.

Entiya koLkaiyAr sIRin iTaimurintuvEntanum vEntu keTum

Vasantha Sankarraman

பொருள் / உரை

முருகா எளிய உரை

உயர்ந்த அறக்கொள்கைகளையும் ஒழுக்கத்தையும் கொண்ட சான்றோர்கள் சினந்து எழுந்தால், நாடாளும் பேரரசனும் கூடத் தன் ஆட்சியின் நடுவிலேயே ஆட்சி உடைந்து பதவியிழந்து அடியோடு கெட்டு அழிவான்.

• ஏந்திய கொள்கையார் சீறின் = உயர்ந்த கொள்கையுடைய சான்றோர் சினந்தால்,• இடைமுரிந்து வேந்தனும் = ஆட்சியாளனும் இடையிலேயே அரசுரிமை முறிந்து,• வேந்து கெடும் = தன் அரச பதவியை இழந்து கெடுவான்.

மு.வரதராசன்

உயர்ந்த கொள்கையுடைய பெரியவர் சீறினால் நாட்டை ஆளும் அரசனும் இடை நடுவே முறிந்து அரசு இழந்து கெடுவான்.

பரிமேலழகர்

ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடையே தன் பதம் இழந்து கெடும். '(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

உயர்ந்த கொள்கையை உடைய பெரியோர் சினம் கொள்வார் என்றால், ஆட்சியாளனும்கூடத் தன் பதவியை இடையிலேயே இழந்து கெடுவான்.

Meaning in English

When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout