Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 898

பொருட்பால்அங்கவியல்90. பெரியாரைப் பிழையாமை

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து.

kunRannAr kunRa matippiR kuTiyoTuninRannAr mAyvar nilattu

DD-Media-29

பொருள் / உரை

முருகா எளிய உரை

மலைபோன்ற உயர்ந்த ஆற்றலும் ஒழுக்கமும் கொண்ட பெரியோர்கள் சினந்து அழிக்க எண்ணிவிட்டால், இவ்வுலகில் அழியாமல் நிலைத்து நிற்பது போன்ற வலிமைமிக்க செல்வந்தர்களும் தம் குலத்தோடும் வம்சத்தோடும் அடியோடு அழிந்துபோவார்கள்.

• குன்றன்னார் குன்ற மதிப்பின் = மலைபோன்ற ஆற்றல் மிக்க பெரியோர் அழிக்க நினைத்தால்,• நிலத்து நின்றன்னார் = உலகில் நிலைபெற்று நிற்பது போன்ற அரசரும் செல்வந்தரும்,• குடியொடு மாய்வர் = தம் குடும்பத்தோடு வம்சத்தோடு அழிந்துபோவார்கள்.

மு.வரதராசன்

மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

பரிமேலழகர்

குன்று அன்னார் குன்ற மதிப்பின் - குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்று அன்னார் குடியொடு மாய்வர் - அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர். (வெயில், மழை முதலிய பொறுத்தலும் சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், 'குன்றன்னார்' என்றார். 'மல்லல் மலையனைய மாதவர்'(சீவக.முத்தி-191) என்றார் பிறரும். நிலை பெற்றாற் போறலாவது, இறப்பப் பெரியராகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லை என்று கருதப்படுதல்.)

சாலமன் பாப்பையா

மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

Meaning in English

If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout