Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 897

பொருட்பால்அங்கவியல்90. பெரியாரைப் பிழையாமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்.

vakaimANTa vAzhkkaiyum vAnporuLum ennAmtakaimANTa takkAr seRin

Kurale Kavithaiyai

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• தகைமாண்ட தக்கார் செறின் = குணங்களால் சிறந்த பெரியோர் சினந்தால்,• வகைமாண்ட வாழ்க்கையும் = பலவகை சிறப்புமிக்க ஆடம்பர வாழ்க்கையும்,• வான்பொருளும் என்னாம் = குவிந்த பெருஞ்செல்வமும் எதற்கு உதவும்?எளிய விளக்கம்:நற்குணங்களும் தகுதியும் மிக்க பெரியோர்கள் சினங்கொள்ளும் நிலையை ஒருவன் ஏற்படுத்தினால், அவன் அனுபவிக்கும் பலவகை ஆடம்பர வாழ்க்கையும், குவித்து வைத்துள்ள பெருஞ்செல்வமும் எதற்கும் உதவாமல் அடியோடு அழிந்துவிடும்.

மு.வரதராசன்

தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

பரிமேலழகர்

தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? (உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் செறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித்தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.)

சாலமன் பாப்பையா

குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?

Meaning in English

Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout