கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை.
kOLil poRiyin kuNamilavE eNkuNattAntALai vaNangkAt talai
திருக்குறள் 9: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
இறைவன் திருவடி வணங்காத தலை!எட்டு குணத்தவன் முன் குனியாத தலை!பார்க்காத கண்ணைப் போல அது பயன் இல்லை!கேட்காத காதைப் போல அது பயன் இல்லை!
• எண்குணத்தான் = எட்டு வகையான தெய்வீக நற்குணங்களை உடைய இறைவனுடைய• தாளை வணங்காத் தலை = திருவடிகளைப் பணிந்து வணங்காத தலைகள்,• கோள் இல் பொறியில் = பார்க்காத கண், கேட்காத செவி போன்ற செயலற்ற புலன்களைப் போல,• குணம் இலவே = எந்தப் பயனும் இல்லாத வெற்றுப் பொருட்களேயாகும்.
Murugaa simple commentary
The head that does not worship the sacred feet of God!The head that does not bow before the one with eight qualities!Like an eye that does not see, it has no use!Like an ear that does not hear, it has no use!
• One with eight attributes = Of God who possesses eight kinds of divine good qualities• The head that does not worship the feet = Heads that do not bow and worship the sacred feet,• Like sense organs without perception = Like inactive senses such as an eye that does not see, an ear that does not hear,• Have no qualities = Are merely empty objects without any use.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்
பரிமேலழகர்
கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.)
Parimelazhagar
Like sense organs without perception, they have no virtue, they are of no use, like sense organs that do not grasp the sensory objects suited to each of them; heads that do not bow to the feet of the One of eight qualities, heads that do not bow to the feet of Him who possesses eight kinds of qualities. (The eight qualities are these: being independent, having a pure body, having innate consciousness, knowing everything, being naturally free from bonds, possessing great grace, possessing endless power, and possessing boundless bliss. Thus it has been stated in the Saiva Agama. There are also those who explain them as those beginning with 'Anima', and as those beginning with 'boundless knowledge'. Placing it upon the head, he said that heads that do not bow are useless, like an eye that does not see and so forth. Even though he said so, understand by association that tongues that do not praise are likewise useless. By these three verses, the fault incurred when one does not think of Him, praise Him, and bow to Him has been stated.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே
Meaning in English
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead
