அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.
aRavAzhi antaNan tALsErntArk kallAlpiRavAzhi nIntal aritu
திருக்குறள் 8: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறக்கடல் இறைவனை நினைக்காதவர்க்கு!அவன் திருவடிப் படகைப் பற்றாதவர்க்கு!பொருள் இன்பக் கடலைக் கடப்பது அரிது!பிறவிப் பெருங்கடல் நீந்துவது அரிது!
• அற ஆழி அந்தணன் = தர்மத்தின் பெருங்கடலாகவும் பேரருளாளனாகவும் விளங்கும் இறைவனுடைய• தாள் சேர்ந்தார்க்கு அல்லால் = திருவடிகளைத் துணையாகப் பற்றிக்கொண்டவர்களைத் தவிர,• பிற ஆழி = பொருள், இன்பம் மற்றும் பிறவி என்னும் மற்ற கடல்களை• நீந்தல் அரிது = நீந்திக் கடப்பது மற்றவர்களால் இயலாததாகும்.
Murugaa simple commentary
For those who do not think of God, the ocean of virtue!For those who do not hold onto the boat of his holy feet!Crossing the ocean of wealth and pleasure is difficult!Swimming across the great ocean of birth is difficult!
• Ocean of virtue, the benevolent Lord = Of God who shines as the great ocean of righteousness and supreme benevolence• Except for those who reach the feet = Except for those who held onto the holy feet as support,• Other oceans = The other oceans called wealth, pleasure, and birth• Swimming across is difficult = Swimming across is impossible for others.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது
பரிமேலழகர்
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)
Parimelazhagar
Except for those who have reached the feet of the gracious one who is the ocean of virtue, except for those who have reached the raft that is the feet of the gracious one who is the ocean of virtue; swimming across the other oceans is hard. Swimming across the oceans other than that is hard. (Because virtue was separated out first among the three counted together as virtue, wealth, and pleasure, the remaining wealth and pleasure were called 'the other'. Since he has all the various kinds of virtues as his form, he called him 'the gracious one who is the ocean of virtue'. There are also those who take 'ocean of virtue' to mean the wheel of dharma, and explain it as 'the gracious one who possesses that'. Since those who do not reach that raft will not see the shore and will sink within them, he said 'swimming across is hard'. This is a partial metaphor.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்
Meaning in English
Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard the further bank of being's changeful sea to attain
