தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.
tanakkuvamai illAtAn tALsErntArk kallAlmanakkavalai mARRal aritu
திருக்குறள் 7: முருகா பாடல்
1 / 2
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன்னிகர் இல்லாத இறைவனை நினைக்காமல்!அவன் திருவடியை நெஞ்சால் பற்றிக் கொள்ளாமல்!மனதில் உள்ள கவலை தீர்வது அரிது!மனக்கவலை மாற்றுவது மிக அரிது!
• தனக்கு உவமை இல்லாதான் = தனக்கு நிகரோ ஒப்பீடோ இல்லாத ஒப்பற்ற இறைவனுடைய• தாள் சேர்ந்தார்க்கு அல்லால் = திருவடிகளைப் பற்றிச் சரணடைந்தவர்களைத் தவிர,• மனக்கவலை = மற்றவர்களால் தங்கள் மனதில் எழும் தீராத கவலைகளையும் துயரங்களையும்• மாற்றல் அரிது = நீக்குவது இயலாத காரியமாகும்.
மு.வரதராசன்
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
பரிமேலழகர்
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
Meaning in English
Unless His foot, 'to Whom none can compare,' men gain, 'Tis hard for mind to find relief from anxious pain





