யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்.
yANTussen RiyANTum uLarAkAr ventuppinvEntu seRappaT Tavar
Lakshmi Venkateswaran
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகைவர்க்கு அஞ்சத்தக்க கடும் வலிமை கொண்ட பேரரசரின் சினத்திற்கு ஆளானவர்கள், அவரிடமிருந்து தப்பித்து எங்கு ஓடி ஒளிந்தாலும் எவ்விடத்திலும் உயிரோடு வாழ முடியாது.
• வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் = கடும் வலிமை கொண்ட அரசரின் சினத்திற்கு ஆளானவர்,• யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் = எங்கு சென்றாலும் எங்கும் உயிரோடு வாழ முடியாது.
Murugaa simple commentary
Those who have incurred the anger of an emperor possessing severe strength to be feared by enemies, wherever they run and hide escaping from him, cannot remain alive in any place.
• Those who have incurred the wrath of a king of fierce strength = Those who have incurred the anger of a king possessing severe strength,• Wherever they go, they will not survive anywhere = Wherever they go, they cannot remain alive anywhere.
Machine translation from the Tamil
மு.வரதராசன்
மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
பரிமேலழகர்
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர் - பகைவர்க்குவெய்தாய வலியினையுடைய வேந்தனால் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் -அவனைத் தப்பி எங்கே போயுளராவார், ஓரிடத்தும் உளராகார்.(இடை வந்த சொற்கள் அவாய் நிலையான் வந்தன. 'வெந்துப்பின்வேந்து' ஆகலால், தம் நிலம் விட்டுப் போயவர்க்கு இடங்கொடுப்பாரில்லை, உளராயின், இவர் இனி ஆகார்என்பது நோக்கி அவனொடு நட்புக்கோடற் பொருட்டும், தாமே வந்தெய்திய அவர் உடைமையை வௌவுதற்பொருட்டும் கொல்வர், அன்றெனில் உடனே அழிவர் என்பன நோக்கி 'யாண்டுச்சென்று யாண்டும் உளராகார்' என்றார். இதனால் அக்குற்றமுடையார் 'அருமை உடையஅரண் சேர்ந்தும் உய்யார்' என்பது கூறப்பட்டது.)
Parimelazhagar
Vendhuppin vendhu serappattavar, kings who have incurred the wrath of a monarch of fierce strength toward enemies; yaandu senru yaandum ularaagaar, escaping him, where can they go and survive, they will not survive anywhere. (The intervening words are supplied by elliptical expectancy. Since he is a 'monarch of fierce strength', there is no one who will give shelter to those who have left their own land and gone away, and if there are any, seeing that these men will no longer prosper, they will kill them in order to gain friendship with him and in order to seize their possessions that have come to them of their own accord, and if not, they themselves will perish along with them; having all these in view, he said 'yaandu senru yaandum ularaagaar'. By this it was stated that those who have committed that fault 'will not be saved even if they reach a fortress that is difficult to capture'.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.
Meaning in English
Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead

