Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 893

பொருட்பால்அங்கவியல்90. பெரியாரைப் பிழையாமை

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு.

keTalvENTiR kELAtu seyka aTalvENTinARRu pavarkaN izhukku

Ritthikha Vijay

பொருள் / உரை

முருகா எளிய உரை

நினைத்த மாத்திரத்தில் எவரையும் அழித்துவிடக்கூடிய பேராற்றல் படைத்தவர்களிடம் தவறிழைப்பதை, ஒருவன் தானே கெட்டு அழிய விரும்பினால் யார் பேச்சையும் கேளாமல் தாராளமாகச் செய்து அழியட்டும்.

• அடல்வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு = நினைத்தவுடன் அழிக்கும் ஆற்றல் மிக்கோரிடம் செய்யும் தவறை,• கெடல்வேண்டின் கேளாது செய்க = தான் கெட்டழிய விரும்புபவன் எவர் பேச்சையும் கேளாமல் செய்யட்டும்.

மு.வரதராசன்

அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

பரிமேலழகர்

அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - வேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்க - தான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க. (அப்பெரியாரைக் 'காலனும் காலம் பார்க்கும் பாராது -வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய - வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்' (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல் 'செய்யலாகாது' என்று கூறலின், 'கேளாது' என்றார்.)

சாலமன் பாப்பையா

ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.

Meaning in English

Who ruin covet let them shut their ears, and do despite To those who, where they list to ruin have the might

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout