பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்பேரா இடும்பை தரும்.
periyAraip pENA tozhukiR periyArARpErA iTumpai tarum
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
அறிவு, ஆற்றல், ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்த பெரியோர்களை மதித்துப் போற்றாமல் வாழ்ந்தால், அப்பெரியோர்களால் ஒருபோதும் நீங்காத பெருந்துன்பமும் அழிவும் வந்து சேரும்.
• பெரியாரைப் பேணாது ஒழுகின் = பெரியோர்களைப் போற்றாமல் வாழ்ந்தால்,• பெரியாரால் பேரா இடும்பை தரும் = அப்பெரியோரால் நீங்காத துன்பம் உண்டாகும்.
மு.வரதராசன்
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
பரிமேலழகர்
பெரியாரைப் பேணாது ஒழுகின் - ஆற்றல்களால் பெரியராயினாரை வேந்தன் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின், பெரியாரால் பேரா இடும்பை தரும் - அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும். (அத்துன்பங்களாவன, இருமையினும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களும் ஆம், அவையெல்லாம் தாமே செய்துகொள்கின்றனர் என்பது தோன்ற, ஒழுக்கத்தை வினை முதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொது வகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனாற் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையாற் கூறுப.)
சாலமன் பாப்பையா
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
Meaning in English
If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill





