Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 891

பொருட்பால்அங்கவியல்90. பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை.

ARRuvAr ARRal ikazhAmai pORRuvArpORRaluL ellAm talai

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் படைத்த பெரியோர்களின் வலிமையை அவமதிக்காமல் இருப்பதே, தமக்குத் தீங்கு நேராமல் காத்துக் கொள்பவர்கள் செய்யும் பாதுகாப்புகள் அனைத்திலும் முதன்மையான சிறந்த பாதுகாப்பாகும்.

• ஆற்றுவார் ஆற்றல் இகழாமை = பெரியோரின் பேராற்றலை அவமதிக்காமல் இருப்பது,• போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை = தற்காத்துக் கொள்பவர் செய்யும் காவல்கள் அனைத்திலும் தலைசிறந்தது.

மு.வரதராசன்

மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

பரிமேலழகர்

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

Meaning in English

The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout