உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.
uTampA TilAtavar vAzhkkai kuTangkaruLpAmpO TuTanuRain taRRu
B. Gopalakrishnan
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளத்தில் உண்மையான பொருத்தமும் அன்பும் இல்லாத உட்பகையாளரோடு கூடி வாழும் வாழ்க்கையானது, ஒரு சிறிய குடிசைக்குள் கொடிய விஷப் பாம்போடு சேர்ந்து வாழ்வதைப் போல எந்நேரமும் ஆபத்தையும் அச்சத்தையுமே தரும்.
• உடம்பாடிலாதவர் வாழ்க்கை = மனப் பொருத்தமில்லாதவரோடு வாழும் வாழ்க்கை,• குடங்கருள் பாம்போடு உடனுறைந்தற்று = ஒரு குடிசைக்குள் நச்சுப் பாம்போடு வாழ்வது போன்றது.
மு.வரதராசன்
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
பரிமேலழகர்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். (குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம், ஆகவே, அவ்வுவமையால் இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். (இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
மனப்பொருத்தம் இல்லாதவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.
Meaning in English
Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company





