Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 889

பொருட்பால்அங்கவியல்89. உட்பகை

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு.

eTpaka vanna siRumaittE AyinumuTpakai uLLatAng kETu

G. Srinivasan

பொருள் / உரை

முருகா எளிய உரை

எள்ளின் பிளவைப் போல மிகச் சிறியதாகவே தோன்றினாலும், ஒரு குடும்பத்தையோ வாழ்வையோ அடியோடு அழிக்கக்கூடிய பெருங்கேடு அந்த உட்பகைக்குள்ளேயே மறைந்திருக்கும்.

• எட்பகவன்ன சிறுமைத்தே ஆயினும் = எள்ளின் பிளவு போன்ற சிறியதே ஆயினும்,• உட்பகை உள்ளதாங் கேடு = உட்பகைக்குள் முழு அழிவும் அடங்கி இருக்கும்.

மு.வரதராசன்

எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

பரிமேலழகர்

உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம். (எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.

Meaning in English

Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmity

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout