Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 888

பொருட்பால்அங்கவியல்89. உட்பகை

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுஉட்பகை உற்ற குடி.

aramporuta ponpOlat tEyum uramporutuTpakai uRRa kuTi

D. Tanushri

பொருள் / உரை

முருகா எளிய உரை

அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பு மெல்ல மெல்லத் தன் வலிமை இழந்து தேய்ந்து போவதுபோல, உட்பகை புகுந்துவிட்ட குடும்பத்தின் வலிமையும் உள்ளிருந்தே தாக்கப்பட்டு நாளுக்கு நாள் குறைந்து அழிந்துபோகும்.

• அரம்பொருத பொன்போல = அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு போல,• உரம்பொருது உட்பகை உற்ற குடி தேயும் = உட்பகை கொண்ட குடும்பம் தன் வலிமை தேய்ந்து அழியும்.

மு.வரதராசன்

உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.

பரிமேலழகர்

உட்பகை உற்ற குடி - முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி, அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். ('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

Meaning in English

As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout