Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 886

பொருட்பால்அங்கவியல்89. உட்பகை

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது.

onRAmai onRiyAr kaTpaTin enjnjAnRumponRAmai onRal aritu

Pavithra Chari

பொருள் / உரை

முருகா எளிய உரை

தன்னோடு நெருங்கி ஒன்றாக இணைந்திருப்பவர்களிடத்திலேயே உட்பகை தோன்றிவிடுமானால், எப்பேர்ப்பட்ட ஆற்றல் கொண்டவனாயினும் அவன் அழியாமல் தப்பிப் பிழைப்பது மிகவும் அரிதாகும்.

• ஒன்றாமை ஒன்றியார்கட்படின் = நெருக்கமானவரிடமே உட்பகை தோன்றிவிட்டால்,• எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது = எக்காலத்திலும் அழியாமல் தப்பிப் பிழைப்பது அரிது.

மு.வரதராசன்

ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

பரிமேலழகர்

ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

Meaning in English

If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout