உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்.
uRalmuRaiyAn uTpakai tOnRin iRalmuRaiyAnEtam palavum tarum
Bhaskar JB
பொருள் / உரை
முருகா எளிய உரை
மிக நெருங்கிய சொந்த உறவினர்களுக்குள்ளேயே ஒருவனுக்கு உட்பகை தோன்றுமானால், அது அவனுக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய கொடிய துன்பங்களையும் பல அழிவுகளையும் உண்டாக்கும்.
• உறல்முறையான் உட்பகை தோன்றின் = நெருங்கிய உறவினருக்குள் உட்பகை தோன்றினால்,• இறல்முறையான் ஏதம் பலவும் தரும் = சாவோடு கூடிய பல கொடிய துன்பங்களை உண்டாக்கும்.
மு.வரதராசன்
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
பரிமேலழகர்
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.)
சாலமன் பாப்பையா
உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.
Meaning in English
Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise





