Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 884

பொருட்பால்அங்கவியல்89. உட்பகை

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்.

manamANA uTpakai tOnRin inamANAEtam palavum tarum

Giridharan

பொருள் / உரை

முருகா எளிய உரை

வெளிப்படையாக உறவுபோல் நடித்து உள்ளத்தில் ஒன்றுபடாத உட்பகை ஒருவருக்கு ஏற்பட்டால், அது அவரது உற்றார் உறவினர் அவரோடு சேராமல் விலகிப் பிரியும் கொடிய குற்றங்களையும் பல அழிவுகளையும் உண்டாக்கும்.

• மனமாணா உட்பகை தோன்றின் = உள்ளத்தில் ஒன்றுபடாத வஞ்சக உட்பகை தோன்றினால்,• இனமாணா ஏதம் பலவும் தரும் = சுற்றத்தார் ஒன்றுபடாமல் பிரியும் பல பெருங்கேடுகளை உண்டாக்கும்.

மு.வரதராசன்

மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

பரிமேலழகர்

மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் -அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். (அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)

சாலமன் பாப்பையா

புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம் வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

Meaning in English

If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout