Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 881

பொருட்பால்அங்கவியல்89. உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்.

nizhalnIrum innAta innA tamarnIruminnAvAm innA seyin

Harini Sivasubramanian

பொருள் / உரை

முருகா எளிய உரை

இனிமையான நிழலும் குளிர்ந்த நீரும்கூட நமக்கு நோயைத் தரும் என்றால் அவை தீமையே தரும்; அதுபோலவே, நம்முடன் வாழும் சொந்த பந்தங்களின் இயல்புகளும் நமக்குத் தீங்கு விளைவிக்குமானால் அவை கொடிய உட்பகையாய் முடிந்து தீமையே பயக்கும்.

• நிழல்நீரும் இன்னாத இன்னா = உடலுக்குத் தீங்கு செய்யும் நிழலும் நீரும் தீயனவேயாகும்,• தமர்நீரும் இன்னாசெயின் இன்னாவாம் = உறவினரின் குணங்களும் தீங்கு செய்யுமானால் தீமையே தரும்.

மு.வரதராசன்

இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும்.

பரிமேலழகர்

நிழல் நீரும் இன்னாத இன்னா - ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். (நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.)

சாலமன் பாப்பையா

நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே.

Meaning in English

Water and shade, if they unwholesome prove, will bring you pain And qualities of friends who treacherous act, will be your bane

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout