Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 880

பொருட்பால்அங்கவியல்88. பகைத்திறந்தெரிதல்

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்.

uyirppa uLarallar manRa seyirppavarsemmal sitaikkalA tAr

G. A. Kavini

பொருள் / உரை

முருகா எளிய உரை

தம்மைப் பகைத்த எதிரிகளின் ஆணவச் செருக்கை அடக்கத் துணியாதவர்கள், அடுத்த மூச்சு விடும் நேரத்திற்குக்கூட உயிரோடு நிலைத்திருக்க முடியாது; உறுதியாகப் பகைவரால் வீழ்த்தப்படுவர்.

• செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் = பகைவரின் ஆணவச் செருக்கை அடக்காதவர்,• உயிர்ப்ப உளரல்லர் மன்ற = அடுத்த மூச்சு விடும் அளவுக்குக்கூட உயிரோடு வாழ மாட்டார்கள்.

மு.வரதராசன்

பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

பரிமேலழகர்

செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கு மாத்திரத்திற்கும் உளரல்லர் ஒருதலையாக. (அவர் வலியராய்த் தம்மைக் களைதல் ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர் உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும் அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.

Meaning in English

But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout