இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து.
iLaitAka muLmaram kolka kaLaiyunarkaikollum kAzhtta iTattu
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
முள்மரம் சிறிய இளங்கன்றாக இருக்கும்போதே அதை வெட்டி அழிக்க வேண்டும்; அதுவே முற்றிப் பெரிய மரமாகிவிட்டால், அதை வெட்ட முயல்வோரின் கைகளையே குத்திக் காயப்படுத்திவிடும். (பகையையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்).
• இளைதாக முள்மரம் கொல்க = முள்மரத்தை இளஞ்செடியாக இருக்கும்போதே வெட்டி விடுக,• காழ்த்தவிடத்துக் களையுநர் கைகொல்லும் = முற்றி வளர்ந்துவிட்டால் வெட்டுபவரின் கைகளையே காயப்படுத்தும்.
மு.வரதராசன்
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
பரிமேலழகர்
முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.
Meaning in English
Destroy the thorn, while tender point can work thee no offence; Matured by time, 'twill pierce the hand that plucks it thence





