பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.
parintOmpip paRRaRREm enpar viruntOmpivELvi talaippaTA tAr
Hariharan Shanmuganathan
பொருள் / உரை
முருகா எளிய உரை
விருந்தோம்பல் ஆகிய வேள்வி செய்யாதார்!கஷ்டப்பட்டுத் தம் செல்வத்தைக் காத்து வைத்தும்!செல்வத்தை இழக்கும் நேரத்தில் அவரோ!பற்றொன்றும் இல்லையே என்று வருந்துவார்!
• விருந்தோம்பி = விருந்தினரை உபசரித்து• வேள்வி தலைப்படாதார் = அந்த அறவேள்வியில் ஈடுபடாதவர்கள்,• பரிந்து ஓம்பி = செல்வத்தைக் கஷ்டப்பட்டுப் பாதுகாத்து வைத்து,• பற்று அற்றேம் என்பர் = (இறுதியில் இழக்கும்போது) 'எந்தப் பற்றுக்கோடும் இல்லாதவராகி விட்டோமே!' என்று வருந்துவர்.
மு.வரதராசன்
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்
பரிமேலழகர்
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.)
சாலமன் பாப்பையா
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.
Meaning in English
With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry, Who cherish not their guests, nor kindly help supply





