Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 87

அறத்துப்பால்இல்லறவியல்9. விருந்தோம்பல்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்.

inaittuNait tenpaton Rillai viruntintuNaittuNai vELvip payan

Shrinidhi

பொருள் / உரை

முருகா எளிய உரை

விருந்தோம்பல் என்னும் வேள்வியின் பயனே!இவ்வளவென்று அளவிடல் ஆகாதே!வரும் விருந்தினர் தகுதிக்கு ஏற்றே!எல்லையின்றி அது பெருகிடும் மேலே!

• வேள்விப் பயன் = விருந்தோம்பல் என்னும் வேள்வியின் (யாகத்தின்) நற்பயன்• இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை = 'இவ்வளவு பெரியது' என்று அளவிடக்கூடியது அல்ல;• விருந்தின் துணைத்துணை = வந்த விருந்தினரின் தகுதி, பெருமைகளுக்கு ஏற்ப அதன் பலனும் அளவற்றதாகப் பெருகும்.

மு.வரதராசன்

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்

பரிமேலழகர்

வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

Meaning in English

To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout