செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு.
selvirun tOmpi varuviruntu pArttiruppAnnalviruntu vAnat tavarkku
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
வந்த விருந்தினரை அன்போடு போற்றி!பின்விருந்தினரை ஆவலோடு காத்து!வானுலகத்தே வாழும் தேவர்கள் காண்பார்!மேலான விருந்தினன் என்றே மதிப்பார்!
• செல்விருந்து ஓம்பி = வந்த விருந்தினரை அன்போடு உபசரித்து,• வருவிருந்து பார்த்து இருப்பான் = அடுத்து வரும் விருந்தினரை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பவன்,• வானத்தவர்க்கு = வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கும்• நல்விருந்து = மிகச் சிறந்த விருந்தினனாக மதிக்கப்படுவான்.
மு.வரதராசன்
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்
பரிமேலழகர்
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
Meaning in English
The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is he





